மேக சந்தேசம்


காலம், தேசம் ஆகியவைகளின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது இலக்கியம். மேக சந்தேசம் என்பது மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட, மேகத்தைத் தூதனுப்பும் முறையில் அமைந்துள்ள ஒரு தூது காவியமாகும். இந்நூல் கிறிஸ்துவுக்குப் பிறகு நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வடமொழி இலக்கிய நூல்களிலேயே மிகத் தீவிரமான, காதலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ள, நூல் மேக சந்தேசம் என்கிற தூது காவியமாகும். மனித இனத்தின் உடலியல் சார்ந்த காதல், விரகம் ஆகிய எண்ணங்களை (மன விகாரங்களை) இதுபோல மிகவும் வித்தியாசமான முறையில் சித்தரித்துள்ள ஒரு சுதந்திர காவியம் இதற்குமுன் எழுதப் பட்டிருந்திருக்கும் என்று நினைப்பதற்கில்லை. மந்தா கிராந்தா என்னும் வடமொழி விருத்தத்தில் அமைந்துள்ள இந்நூலுக்கு இவ்விருத்தம் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

Listen to

Meghadootham

You’ll

love it

பகுதியாக – 1

யக்ஷர்கள் என்பவர்கள் வானுலகில் கைலாசத்தில் உள்ள அளகாபுரியில் வசிப்பவர்கள். செல்வங்களின் மன்னனான வைஸ்ரவணன் என்பவர்தான் அவர்களது அரசராவார். அவரது அடிமையான ஒரு யக்ஷன் ஒருமுறை தனது கடமையிலிருந்து தவறிவிட்டதால் அரசன் அவனைத் தனது மனதுக்கினியாளிடமிருந்து ஒரு வருட காலம் பிரிந்து வாழுமாறு சபித்துவிட்டான்.

பகுதியாக – 2

மனிதரெல்லாம் போற்றி வணங்கும் ஸ்ரீ ராமபிரானின் திருக்கால் சுவடுகளைத் தன் பள்ளத்தாக்குகளில் தாங்கியுள்ளவனும் தங்களுடைய நெருங்கிய நண்பனும் உயர்ந்தவனுமான இந்த மலையைக் கட்டிப்பிடித்து விடை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மலையோ மழை பெய்யத் துவங்கும் காலத்தில் தங்களது நீண்டகாலப் பிரிவாற்றலைத் தாளாமல் தங்களைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரைப் பொழிவதன்மூலம் தனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

பகுதியாக – 3

தாங்கள் எனது நாட்டை நெருங்கும்போது தசார்ண தேசம் என்னும் ஒரு நாடு தாழம்பூக்களும் கிராமிய மரங்களும் காட்டு எல்லைப் பகுதிகளில் காய்கள் கனிந்து கறுப்பு நிறமாகிய நாவல் மரங்களும் அன்னப் பறவைகளும் நிறைந்ததாகக் காணப்படும். விதிஸா என்னும் பெயரால் நாடெங்கும் புகழ் பெற்ற அந்நாட்டின் தலைநகரத்தை சென்றடைந்தால் தாங்கள் காதலின் உன்னதமான பலனை அடையலாம்.

பகுதியாக – 4

சண்டேஸ்வரனுடைய அந்தக் ஆலயத்தில் கதிரவன் மறையும்வரை தாங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தால்

திரிசூலபாணியான அந்த இறைவனின் மாலைநேர அர்ச்சனையில் பெரும்பறை என்னும் மேளத்திற்குப் பதிலாகத் தங்களது இடி நாதத்தை முழக்குவதன்மூலம் முழுமையான பலனை அடையாலாம். அடையலாம்.

பகுதியாக – 5

தாங்கள் தூவுகின்ற மழையை ஏற்றுக்கொண்டு பெருமூச்சு விடுகின்ற மண்ணின் மணம்கொண்ட யானைகள் தம் தும்பிக்கைகளின் உட்புறமாக காற்றை உறிஞ்சும்போது ஏற்படுகிற இனிமையான இரைச்சலைப் போன்ற சத்தத்துடன் கூடிய குளிர்காற்று தேவகிரியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் உங்களது கீழாக வீசிக் கொண்டிருக்கும். அவ்விடத்தைத் தனது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டிருக்கும் ஸ்கந்தனை தாங்கள் நேரடியாகவே விண்ணாற்றின் நீரால் நனைத்த பூக்களால் முறைப்படி நீராட்ட வேண்டும்.

பகுதியாக – 6

காற்றடிக்கும்போது சரளைக் கற்கள் தம்முள் உராய்ந்து உண்டாகும் காட்டுதீ, அதன் தீப்பொறிகளாலும் கவரிமான்களின் வால்முடிகளாலும் அந்த மலையைப் சூழ்ந்துகொள்வ தாக இருந்தால் தாங்கள் அந்தக் காட்டுத்தீயை ஆயிரம் நீர்த் தாரைகளால் முழுமையாக அணைத்துவிட வேண்டும். “நல்லோருக்கு செல்வம் வந்தடைவதன் பலன் ஆபத்தில் அகப்பட்டவர்களின் துயர் தீர்ப்பது அல்லவா?” அங்கே ஒரு பாறையின்மேல் தெளிவாகக் காணப்படுவதும், சித்தர்கள் எப்போதும் பூஜை செய்வதுமான கலாதரனின் திருப்பாதங்களைத் தாங்கள் பக்தியோடு வலம்வர வேண்டும்.

பகுதியாக – 7

அளகாபுரியிலுள்ள விண்ணைத் தொடும் மாடமாளிகைகள் தங்களுடைய ஒவ்வொரு விதமான சிறப்புகளால் தங்களுடன் ஒப்பிடத் தகுதியுடையவையாகும். மின்னலையொத்த அழகிய மங்கையர் உள்ளதாலும் வானவில் போன்ற நிறமுள்ள சித்திரங்கள் உள்ளதாலும் அடைமழையுடன் கூடிய இடியோசை இசைக்கான மேளம் அடிப்பது கொண்டும் தங்களது உள்நீரொத்த நீருடன்கூடிய மணிமயமான நிலங்கள் உள்ளதாலும் அது தங்களுக்கு ஒப்பானது என்பது இதன் பொருளாகும்.

பகுதியாக – 8

அதன் நடுவில் முதிர்ச்சியடையாத மூங்கிலின் நிறமுள்ள மரகத மணிகளால் அடித்தரையிட்டு ஸ்படிகப் பலகையுடன் கூடிய ஒரு பொன். இருக்கை உள்ளது. அதன்மேல் மாலை நேரத்தில் தங்களது தோழனான மயில் என் மனதுக்கினியவளின் கைவளையோசை கேட்டு இன்புற்று தாளமடிப்பதற்கேற்ப நடனமாடக் கற்பிக்கப்படுகிறது. நல்லவனாகிய ஏ மேகமே, இன்று நான் அங்கு இல்லாததால் ஒளியிழந்து நிற்கும் அந்த மாளிகையை, மனதில் கருதும் இந்த அறிகுறிகளைக் கொண்டும் கதவின் இரு புறங்களிலும் வரைந்துள்ள சங்கு, சக்கரம் ஆகியவைகளைக் கொண்டும் தாங்கள் அடையாளம்

பகுதியாக – 9

முந்தைய அன்பினை நினைத்து அமுதைப் பொழியும் குளிர் நிறைந்த கதிர்களாக ஜன்னலினூடே உள்ளே நுழையும் சந்திர கிரணங்களுக்கு நேராகப் போய் அதேபோல் திரும்பி வந்த கண்களைக் கண்ணீரால் கனத்த இமை மயிர்களைக் கொண்டு பாடுபட்டு மூடி, மேகம் மூடிய நாட்களில் உள்ள நீலத்தாமரையைப் போல் உணர்ந்தும் உறங்கியும் அல்லாமலும் இருக்கின்ற தங்களுடைய தோழியின் மனது அன்பு நிறைந்தது என்பதை நானறிவேன். அதனால்தான் இந்த முதல் பிரிவுத் துயரத்தில் இப்படி இருப்பாள் என்று நான் ஊகிக்கிறேன். அவ்வாறன்றி அழகிய வார்த்தைகள் என்னைப் பேச்சாளன் ஆக்கவில்லை. சகோதரா, நான் இப்போது கூறியதையெல்லாம் விரைவில் தங்களுக்கு நேரிலேயே பார்க்கலாம்.

பகுதியாக – 10

உனது உடலை நாவல்கொடிகளாகவும் பார்வையைப் பயம்கொண்ட பெண்மானின் விழிகளாகவும் கன்னங்களின் ஒளியை சந்திரனின் ஒளியாகவும் புருவங்களின் அசைவுகளை ஆற்றின் சிற்றலைகளாகவும் நான் உவமித்தேன் என்றாலும் அவைகளில் உனது சாயல் ஒன்று சேர்ந்து காணப்படவில்லை. பாறையின்மேல் தாதுச் சாயங்களைக் கொண்டு உன்னைப் பொய்க்கோ[பம் கொண்டவளாக வரைந்து என்னை உன் காலடியில் விழுந்து கிடக்கும் நிலையில் வரைய வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் வற்றாது வெளிவருகின்ற கண்ணீரால் எனது பார்வை மூடிப் போகிறது.