மேக சந்தேசம் பகுதியாக – 2

आपृच्छस्व प्रियसखममुं तुंगमालिंग्य शैलं

वन्दै: पुंसां रघुपतिपदैरंगितं मेघलासु

काले काले भवति यस्य सम्योगमेत्य

स्नेहव्यक्ति: चिरविरहजं मुञ्चतो  बाष्पमुष्णम्                                   12

 

मार्गं तावच्छृणु कथयत: त्वत्प्रयाणानुरूपं

सन्देशं मे तदनु जलद श्रोष्यसि श्रोत्रपेयं

खिन्न: खिन्न: शिखरिषु पदं न्यस्य गन्तासि यत्र

क्षीण: क्षीण:  परिलघुपय: श्रोतसां चोपयुज्य                        13

 

अद्रे: शृंगं वहति पवन: किं स्विदित्युन्मुखीभि:

दृष्टोत्साहश्चकितचकितं मुग्द्धसिद्धांगनाभि:

स्थानादस्मात् सरसनिचुलात् उत्पदोदङ्मुख:  खं

दिङ्नागानां पथि परिहरन् स्थूलहस्तावलेपान्                     14

 

रत्नच्छायाव्यतिकर इव प्रेक्ष्यमेतत् पुरस्तात्

वल्मीकाग्रात् प्रभवति धनु: खण्टमाखण्टलस्य

येन श्यामं वपुरतितरां कान्तिं आलप्स्यते ते

बर्हेणेव स्फुरितरुचिना गोपवेषस्य विष्णो:                           15

 

त्वय्यायत्तं क्रिषिफलमिति भ्रूविलासानभिञै

प्रीतिस्निज्धैर्जनपदवधूलोचनै: पीयमान:

सद्य: सीरोत्कषणसुरभिक्षेत्रमारूयह्य मालं

किञ्चित् पश्चाद्व्रज लघुगति: भूय एव उत्तरेण                       16

 

त्वां आसारप्रशमितवनोपप्लवं साधु मूर्ध्ना

वक्ष्यत्यध्वश्रमपरिगतं सानुमानाम्रकूट:

न क्षुद्रोपि प्रथमसुकृतापेक्षया सम्श्रयाय

प्राप्ते मित्रे भवति विमुख: किम्पुनर्यस्तथोच्चै:                         17

 

अध्वक्लान्तं प्रतिमुखगतं सानुमाम्श्चित्रकूट:

तुंगेन त्वां जलद शिरसा वक्ष्यति श्लाघमान:

आसारेण त्वमपि शमयेस्तस्य नैदाघमग्निं

सद्भावार्द्र: फलति नचिरेणोपकारो महत्सु                            18

 

छन्नोपान्त: परिणतफलद्योतिभि: काननाम्रै:

त्वय्यारूढे शिखरमचल: स्निग्धवेणीसवर्णे

नूनं यास्यत्यमरमिथुनप्रेक्षणीयामवस्थां

मद्ध्ये श्याम: स्तन इव भुवश्शेषविस्तारपाण्टु:                     19

 

स्थित्वा तस्मिन्वनचरवधूभुक्तकुंज्जे मुहूर्त्तं

तोयोत्सर्गात् द्रुततरगति: तत्परं वर्त्म तीर्ण्ण:

रेवां द्रक्ष्यस्युपलविषमे विन्ध्यपादे विशीर्णां

भक्तिछेदैरिव विरचितां भूतिमंगे गजस्य                              20

 

तस्यास्तिक्तैर्वनगज मदैर्वासितं वान्तवृष्टि:

जम्बूकुञ्चप्रतिहतरयं तोयमादाय गच्छे:

अन्तस्सारं घन तुलयितुं नानिलश्शक्ष्यति त्वां

 

रिक्तस्सर्वो भवति हि लघु: पूर्ण्णतागौरवाय                          21

नीपं दृष्त्वा हरितकशिपं केसरैरर्द्धरूढै:

आविर्भूतप्रथममुकुला: कन्दलीश्चानुकच्छं

दग्धारण्येष्वधिकसुरभिं गन्धमाघ्राय चोर्व्या  :

 

सारंगास्ते जललवमुचस्सूचयिष्यन्ति मार्गम्                         22

अम्भोबिन्दुग्रहणरभसांश्चातकान् वीक्षमाणा:

श्रेणीभूता: परिगणनया निर्द्दिशन्तो बलाका:

त्वामासाद्य स्तनितसमये मानयिष्यन्ति सिद्धा:

 

सोत्कम्पानिप्रियसहचरीसंभ्रमालिंगितानि                            23

उत्पश्यामि द्रुतमपि सखे मत्प्रियार्त्थं यियासो:

कालक्षेपं ककुभसुरभौ पर्वते पर्वते ते

शुक्लापांगैस्सजलनयनै: स्वागतीकृत्य केका:

प्रत्युद्यात: कथमपि भवान् गंतुमाशु व्यवस्येत्                       24

 

மனிதரெல்லாம் போற்றி வணங்கும் ஸ்ரீ ராமபிரானின் திருக்கால் சுவடுகளைத் தன் பள்ளத்தாக்குகளில் தாங்கியுள்ளவனும் தங்களுடைய நெருங்கிய நண்பனும் உயர்ந்தவனுமான இந்த மலையைக் கட்டிப்பிடித்து விடை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மலையோ மழை பெய்யத் துவங்கும் காலத்தில் தங்களது நீண்டகாலப் பிரிவாற்றலைத் தாளாமல் தங்களைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரைப் பொழிவதன்மூலம் தனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறது. படகுகள் நிறுத்தப் பட்டுள்ள இந்த இடத்திலிருந்து, குன்றின் உச்சி காற்றில் பெயர்ந்துபோய்ப் பறக்கிறதோ என்று ஆவலுடன் தங்களை அண்ணாந்து பார்க்கும் சித்தப் பெண்மணிகளையும் வழியில் திக் கஜங்களையும் பார்த்துக் கொண்டு நேராக ஆகாயத்தில் வடக்குதிசையை நோக்கிப் போங்கள். இதோ, புற்று போன்ற தங்களுடைய முனையிலிருந்து பல்வேறு விதமான இரத்தினங்கள் ஒன்று சேர்ந்து ஒளி வீசுவதுபோன்ற ஒரு சிறு வானவில்லின் துண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் தங்களுடைய கரிய மேனி மயில்பீலிகளால் அலங்கரிக்கப்பட்ட திருமாலின் திருவுடல் போல அழகுடன் மிளிரும். பயிர்களின் விளைச்சல் உமது அதிகாரத்திற்குட்பட்டது என்பதால் உம்மிடம் அன்பு பூண்டு நடந்து நீங்குபவையும் புருவங்களின் சைகைகளை அறியாதவர்களுமான கிராமியப் பெண்கொடிகளின் கண்களால் கிரகிக்கப்பட்டு மண்வாசனையைச் சுமந்து நிற்கும் நாற்றங்கால்களைக் கடந்து சிறிது மேற்காகப் போய் மீண்டும் வடதிசைக்குச் செல்வீராக. அங்கே பெருமாரி பொழிந்தும் காட்டின் வறட்சியை அகற்றிக்கொண்டும் முன்னோக்கி அலைந்து திரிகின்ற தங்களை மாந்தோப்புகள் நிறைந்த ஆம்ரகூடம் என்னும் ஒரு பர்வதம் தன் தலையில் ஏற்றிக் கொள்ளும். முன்னர் தனக்கு உதவி செய்துள்ள நண்பன் தற்போது உதவி கேட்டு வரும்போது ஏழை எளியவர்கள் போலும் அதை மறுப்பதில்லை.. அவ்வாறிருக்க தலையுயர்த்தி நிற்கும் இந்த ஆம்ரகூடம் மறுக்குமா? அதன்பின் உள்ள வழியைக் கடந்து சென்றால் மழைத் தொடர்களாலாகிய விந்திய மலைப் பகுதியில் யானையின் மேல் பூசப்பட்ட திருநீற்றுக் கோடுகள் போல நர்மதை நதி சிதறி ஓடுவதைக் காணலாம். இதற்குள் மழையாகப் பெய்து ஓய்ந்த தாங்கள், காட்டு யானைகளின் மதநீரின் மணம் நிறைந்ததும் நாவல் மரத் தோப்புகளில் தேங்கி நிற்பதுமான அதன் தண்ணீரை எடுத்துக் கொண்டுதான்

தொடர்ந்து செல்ல வேண்டும். “உள்ளீடற்ற எதுவும் இலேசானதாக இருக்கும், முழுமையில் அன்றோ கௌரவம் இருக்கிறது” என்னும் மூதுரைக்கு ஏற்றவாறு ஏ மேகமே! இவ்வாறு கனம் மிகுதியான தங்களைத் தூக்கிச் செல்லக் காற்றிற்கு இயலாமல் போகும். இடையிடையே ஒவ்வொரு இதழ்கள் விரிவதால் பச்சையும் தவிட்டு நிறமும் கலந்த கடம்ப மலர்களையும் சதுப்பு நிலங்கள் தோறும் முதன்முதலாக அரும்புகிற காளான்களையும் கடித்துக் கொண்டும் நெருப்பால் வெந்த காடுகளில் பரிமளம் மிக்க மண்ணின் மணத்தைப் பரப்பிக் கொண்டும் செல்கிற மான்கள் தங்களுடைய வழியை சூசகமாக அறிவிக்கும். நீர்மருது மரங்களின் பரிமளம் வீசுகிற ஒவ்வொரு மலையின் மேலும் தங்கள் தங்கிச் செல்லலாம் என்பதை நான் முன்கூட்டியே அறிகிறேன். நீர் நிறைந்த கண்களுடன் மயில்கள் தங்களது பேடுகளின் முன் கட்டியம் கூறி நிற்கும்போது தங்களுக்கு உடனடியாக அவ்விடத்தை விட்டுச் செல்லத் தோன்றாது. இருந்தாலும் நண்பரே, எனக்காக அவ்விடத்தை விட்டு விரைந்து செல்ல விரும்புங்கள்.