மேக சந்தேசம் பகுதியாக – 8

तन्मध्ये च स्फटिकफलका काञ्चनीवासयष्टिर्-

मूले बध्वामणिभिरनतिप्रौढवंशप्रकाशैः

तालैः शिञ्चद्वलयसुभगैः कान्तया नर्तितो मे

यामध्यास्ते दिवसविगमे नीलकण्ठः सुहृद् वः  78

 

एभिस्साधो हृदयनिहितैर्लक्षणैर्ल्लक्षयेथाः

द्वारोपान्ते लिखितवपुषौ शंखपद्मौ च दृष्ट्वा ।

क्षामच्छायं भवनमधुना मद्वियोगेन नूनं

सूर्यापाये न खलु कमलं पुष्यति स्वामभिख्यम्॥ 79

 

गत्वा सद्यः कलभतनुतां तत्परित्राणहेतोः

क्रीडाशैले प्रथमकथिते रम्यसानौ निषणः।

अर्हस्यन्तर्भवनपतितां कर्तुमल्पाल्पभासं

खद्योतालीविलसितनिभां विद्युदुन्मेषदृष्टिम्॥  80

 

तन्वी श्यामा शिखरिदशना पक्वबिम्बाधरोष्ठी

मध्ये क्षामा चकितहरिणीप्रेक्षणा निम्ननाभि:

श्रोणीभारादलसगमना स्तोकनम्रा स्तनाभ्यां

या तत्र स्याद् युवतिविषये सृष्टिरादैव धातु:                         81

 

तां जानीया: परिमितकथां जीवितं मे द्वितीयं

दूरीभूते मयि सहचरे चक्रवाकीमिवैकां

गाढोत्कण्ठां गुरुषु दिवसेष्वेषु गछ्त्सु बालां

जातां मन्ये शिशिरमथितां पद्मिनीवान्यरूपाम्                     82

 

नूनं तस्या: प्रबलरुदितोछूननेत्रं प्रियाया

निश्श्वासानामशिशिरतया भिन्नवर्णाधरोष्ठं

हस्ते न्यस्तं मुखमसकलव्यक्ति लम्बालकत्वात्

इन्दोर्दैन्यं त्वदनुसरणक्लिष्टकान्तेबिभर्त्ति                             83

 

आलोके ते निपतति पुरे सा बलिव्याकुला वा

मत्सादृश्यं विरहतनुवाभावगम्यं लिखन्ती

पृछन्ती वा मधुरवचनां शारिकां पञ्जरस्थां

कच्चिद्भर्त्तु: स्मरसि रसिके त्वं हि तस्य प्रियेति                       84

 

उत्सम्गे वा मलिनवसने सौम्य निक्षिप्य वीणां

मद्गोत्रांगं विरचितपदं गेयमुद्गातुकामा

तन्त्रीरार्द्रा नयनसलिलै: सारयित्वा कथञ्जित्

भूयो भूयस्स्वयमपि कृतां मूर्छनां विस्मरन्ती             85

 

शेषान् मासान् गमनदिवसस्थापितस्यावधेर्वा

विन्यस्यन्ती भुवि गणनया देहलीमुक्तपुष्पै:

सम्योगं वा हृदयनिहितारम्भमास्वादयन्ती

प्रायेणैते रमणविरहेह्यंगनानां विनोदा:                                86

 

सव्यापारामहनि न तथा पीडयेन्मद्वियोग:

शङ्के रात्रौ गुरुतरशुचं निर्व्विनोदां सखीं ते

मत्सन्देशैस्सुखयितुमलं पश्य साध्वीं निशीथे

तामुन्निद्रामवनिशयनां सन्नवातायनस्थ:                              87

 

आधिक्षामां विरहशयने सन्निषण्णैक पार्श्वां

प्राचीमूले तनुमिव कलामात्रशेषां हिमांशो:

नीता रात्रि: क्षणमिव मया सार्द्धमिच्छारतैर्या

तामेवोष्णैर्विरहजनितैरश्रुभि: यापयन्तीम्                            88

 

नि:श्वासेनाधरकिसलयक्लेशिना  विक्षिपन्तीं

शिद्धस्नानात्  परुषमलकं नूनमागण्डलंबं

मत्सम्योग क्षणमपि भवेत् स्वप्नजोपीतिनिद्रां

आकांक्षन्तीं नयनसलिलोत्पीडरुद्धावकाशाम्                        89

 

आद्ये बद्ध्वा विरहदिवसे याशिखा दाम हित्वा

शापस्यान्ते विगलितशुचा या मयोद्वेष्टनीया

स्पर्शक्लिष्टामयमितनखेनासकृत् सारयन्तीं

गण्डाभोगात् कठिनविषमामेकवेणीं करणे                            90

 

அதன் நடுவில் முதிர்ச்சியடையாத மூங்கிலின் நிறமுள்ள மரகத மணிகளால் அடித்தரையிட்டு ஸ்படிகப் பலகையுடன் கூடிய ஒரு பொன். இருக்கை உள்ளது. அதன்மேல் மாலை நேரத்தில் தங்களது தோழனான மயில் என் மனதுக்கினியவளின் கைவளையோசை கேட்டு இன்புற்று தாளமடிப்பதற்கேற்ப நடனமாடக் கற்பிக்கப்படுகிறது. நல்லவனாகிய ஏ மேகமே, இன்று நான் அங்கு இல்லாததால் ஒளியிழந்து நிற்கும் அந்த மாளிகையை, மனதில் கருதும் இந்த அறிகுறிகளைக் கொண்டும் கதவின் இரு புறங்களிலும் வரைந்துள்ள சங்கு, சக்கரம் ஆகியவைகளைக் கொண்டும் தாங்கள் அடையாளம்

கண்டுகொள்ளலாம். அந்த சிறு குன்றின்மேல் இருந்துகொண்டு ஒரு குட்டி யானையைப் போல் உருவத்தில் சிறியதாகி தங்களுக்குள் ஒளி வீசும் மின்னலின் வெளிச்சத்தில் தங்களது பார்வையை வீட்டின் உட்புறத்திற்குத் திருப்புங்கள். குறைவாகப் பேசுபவளும், பிரிவுத் துயருற்றவளும் சக்கரவாகப் பேடுபோல் இருப்பவளுமான அவளைத் தாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவ்விளம்பெண் வியாகூலத்தால் கனத்த இத்தனை நாட்களில் பனிக் காலத்தில் நலிந்துபோன தாமரைப் பொய்கை போல ஆயிருப்பாள் என நான் எண்ணுகிறேன்.என் அன்புக்குரியவளின் முகம் மிக அதிகமாக அழுததாலும் முன் நிரையிலுள்ள குறுங்குழல்கள் தாழ்ந்து முகத்தை மறைத்துக் கொண்டு இருப்பதாலும் அடிக்கடி பெருமூச்செறிவதாலும் ஒளியிழந்த சந்திரனின் இரங்கத்தக்க நிலையை அடைந்திருக்க வேண்டும். அவள் அப்போது இறை வழிபாட்டில் முழுகியோ, பிரிவுத்துயரால் மெலிந்த என்னுடைய உருவத்தைத் தன் கற்பனையில் கண்டு ஊகித்து எழுதுவதாகவோ அல்லது கூட்டில் இருந்துகொண்டு இனிமையாகப் பேசும் தனது கிளிப்பிள்ளையிடம்,”என் அருமைக் கிளியே, உனக்கு உன்னுடைய சுவாமியை நினைவிருக்கிறதா? நீ அவருக்கு மிகவும் விருப்பமானவளாயிற்றே,” என்று சொல்லிக்கொண்டிருப்பதாகவும் இருக்கலாம். நண்பனே, அழுக்கடைந்த உடைகளுடன் கூடிய தன் மடியில் வீணையை வைத்துக் கொண்டு எனது பெயர் சேர்த்து இயற்றப்பட்ட பாடலைப் பாடத் தொடங்கவே, கண்ணீரில் நனைந்த கம்பிகளைப் பாடுபட்டுத் துடைத்து முடிக்கும் முன்னரே தான் பாட நினைத்திருந்த ராகம் மறந்து போனதாகவும் இருக்கலாம். விடைபெற்று வந்த அன்று நான் திரும்பி வருவதாக உறுதியாகக் கூறிய நாட்களில் மீதியுள்ளவைகளை வாசல் திண்ணையில் அமர்ந்து மலர்களையிட்டுக் கணக்காக்கி இதயத்தில் எனது சேர்க்கை துவங்கி விட்டதாகக் கற்பனை செய்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். வயதுக்கேற்றவாறு இவைதான் பிரிவுத்துயரால் வாடும் காலத்தில் அணங்குகளின் பொழுது போக்கு ஆகும். பகல் நேரத்தில் வேலைகள் இருப்பதால் பிரிவு அவ்வளவு துயரைக் கொடுப்பதில்லை. இரவில்தான் தங்களுடைய தோழி துயரம் தாளாமல் நேரமும் போகாமல் வருந்துவாள் என்று நான் நினைக்கிறேன். எனவே நள்ளிரவில் உறங்காமல் இருக்கும் அந்த சாந்தகுணமுள்ளவளை என்னுடைய செய்திகளால் மகிழ்விப்பதற்காக அவள் தரையின்மேல் படுத்திருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சாளரத்தின் வழியாகச் சென்று பாருங்கள். துக்கத்தால் உடல் மெலிந்து அவள் விரிப்பில் ஒருக்களித்துப் படுத்திருப்பதால் கிழக்குத் திசையின் ஒரு மூலையில் ஒருசிறு கீற்று மாத்திரமாகக் காணப்படும் பூந்திங்களைப் போலவும் என்னுடன் விருப்பம்போல் ரதிவிளையாட்டுகளில் கழித்த அவள் அதே நீண்ட இரவைக் கண்ணீர் பொழித்துக் கொண்டு கழிப்பவளாகவும் வெறும் விளையாட்டுகளால் முரடாகிவிட்ட, ஏறக்குறையக் கன்னக் கதுப்பு வரை நீண்ட தன் குழல் கற்றைகள் அதரங்களில் இருந்து வெளியேறும் பெருமூச்சுக் காற்றினால் பறக்குமாறும் கனவிலாவது என்னுடைய சேர்க்கை கைவருமோ என்று எண்ணி,உறக்கம் வருவதற்காகக் காத்துக்கொண்டு படுத்திருக்கலாம்.