மேக சந்தேசம் பகுதியாக – 9

पादानिन्दोरमृतशिशिरान् जालमार्ग्गप्रविष्टान्

पूर्व्वप्रीत्या गतमभिमुखं सन्निवृत्तं तथैव

चक्षु: खेदात् सलिलगुरुभि: पक्ष्मभिछादयन्तीं

साभ्रेह्नीव स्थलकमलिनीं न प्रबुद्धां न सुप्ताम्                       91

 

सा सन्यस्ताभरणमबला कोमलं धारयन्तीं

शय्योत्संगे निहितमसकृद्दु:खदु:खेन गात्रं

त्वामप्यश्रुं जललवमयं मोचयिष्यत्यवश्यं

प्राय: सर्व्वोभवति करुणावृत्तिरार्द्रान्तरात्मा                         92

 

जाने सख्यास्तव मयि मनस्संभृतस्नेहमस्मात्

इत्थं भूतां प्रथमविरहे तामहं तर्क्कयामि

वाचालं मां न खलु सुभगं मन्यभाव: करोति

प्रत्यक्षं ते निखिलमचिरात् भ्रातरुक्तं मया यत्                       93

 

रुद्धापाङ्गप्रसरमलकैरञ्जनस्नेहशून्यं

प्रत्यादेशादपि च मधुनो विस्मृतभूविलासं

त्वय्यासन्ने नयनमुपरि स्पन्दि शङ्के मृगाक्ष्या

मीनक्षोभाकुलकुवलयश्रीतुलामेष्यतीति                               94

 

वामश्चास्या: कररुहपदैर्मुच्यमानो मदीयै

र्मुक्ताजालं चिरविरचितं त्याजितो दैवहत्या

सम्भोगान्ते मम समुचितो हस्तसंवाहनानां

यास्यत्यूरु: कनककदलीस्तंभगौरश्चलत्वम्                           95

 

तस्मिन्  काले जलद यदि सा लब्धनिद्रासुखा स्यात्

तत्रासीन: स्तनितविमुखो याममात्रं सहेथा:

मा भूतस्या: प्रणयिनि मयि स्वप्नलब्धे कथञ्जित्

सद्य: कण्ठच्युतभुजलताग्रन्थि गाढोपगूढम्                           96

 

तामुत्थाप्य स्वजलकणिकाशीतलेनानिलेन

प्रत्याश्वस्तां समभिनवैर्ज्जालकैर्म्मालतीनां

विद्युत्कम्बस्तिमितनयनां त्वत्सनाथे गवाक्षे

वक्तुं धीरस्तनितवचनैर्मानिनीं प्रक्रमेथा:                               97

 

भर्त्तुर्मित्रं प्रियमविधवे विद्धि मामंबुवाहं

तत्सन्देशात्मनसि निहितादागतं त्वत्समीपं

यो वृन्दानि त्वरयति पथि श्राम्यतां प्रोषितानां

मन्द्रस्निग्धैर्ध्वनिभिरबलावेणिमोक्षोत्सुकानि                         98

 

इत्याख्याते पवनतनयं मैथिलीवोन्मुखी सा

त्वामुत्कठोछ्वसितहृदया वीक्ष्य सम्भाव्य चैवं

श्रोष्यत्यस्मात् परमवहिता सौम्य सीमन्तिनीनां

कान्तोपान्तात् सुहृदुपगम: सम्गमात् किञ्जिदून:                    99

 

तामायुष्मन् मम च वचनादात्मनश्चोपकर्त्तुं

ब्रूया एवं तव सहचरो रामगिर्याश्रमस्थ:

अव्यापन्न: कुशलमबले पृछति त्वां वियुक्तां

भूतानां हि क्षयिषु करणेष्वाद्यमाश्वास्यमेतत्                        100

 

முந்தைய அன்பினை நினைத்து அமுதைப் பொழியும் குளிர் நிறைந்த கதிர்களாக ஜன்னலினூடே உள்ளே நுழையும் சந்திர கிரணங்களுக்கு நேராகப் போய் அதேபோல் திரும்பி வந்த கண்களைக் கண்ணீரால் கனத்த இமை மயிர்களைக் கொண்டு பாடுபட்டு மூடி, மேகம் மூடிய நாட்களில் உள்ள நீலத்தாமரையைப் போல் உணர்ந்தும் உறங்கியும் அல்லாமலும் இருக்கின்ற தங்களுடைய தோழியின் மனது அன்பு நிறைந்தது என்பதை நானறிவேன். அதனால்தான் இந்த முதல் பிரிவுத் துயரத்தில் இப்படி இருப்பாள் என்று நான் ஊகிக்கிறேன். அவ்வாறன்றி அழகிய வார்த்தைகள் என்னைப் பேச்சாளன் ஆக்கவில்லை. சகோதரா, நான் இப்போது கூறியதையெல்லாம் விரைவில் தங்களுக்கு நேரிலேயே பார்க்கலாம்.
அவளுடைய மனதிற்குகந்தவனான என்னை எவ்வாறோ கனவில் கண்டபோது எனது கழுத்தைக் கட்டிப்பிடித்த அவளது இறுக்கமான ஆலிங்கனம் திடீரென நெகிழ்ந்து போகக்கூடாது. ஆகவே, நீர்முகிலே, அந்த நேரத்தில் அவள் உறக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதாக இருந்தால் அவளருகே சென்று இடியோசை உண்டாக்காமல் ஒரு யாம நேரம் பொறுத்திருக்க வேண்டும். அவளை, உங்களுடைய நீர்த்துளிகளால் குளிர்ந்த தென்றலால் எழுப்பி, பிச்சிப் பூக்க்களின் புது மொட்டுகளின் மணத்தால் சமாதானப் படுத்தி உங்களது மின்னலை உள்ளே ஒதுக்கி அந்த மானொத்தவளிடம் உங்களது இடியாகிய மொழியால் உரையாடத் தொடங்க வேண்டும். “ சுமங்கலியே, நான் உனது கணவரின் நண்பனான மழை மேகம் என்பதை அறிவாயாக. அவரது தூதுமாகத் தான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்”.நான் என்னுடைய வழியில் காணும் சோர்வுற்ற யாத்திரீகர்களின் கூட்டங்களை என்னுடைய முழுத்து கொழுத்த இடியோசையால் பயப்படுத்தி அபலைகளின் கூந்தலை விடுவிக்க உற்சாகத்துடன் முன்னேறுபவனாவேன். நீங்கள் இவ்வளவும் கூறியபிறகு வாயுபுத்திரனை ஜானகிதேவி உபசரித்ததுபோல் அவள் பதட்டத்துடன் தங்களையும் உபசரிப்பாள். நண்பனே, இதற்குப் பிறகு நான் சொல்லப்போவதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மங்கையருக்குத் தமது கணவரிடமிருந்து நண்பர்கள் வருவது மிகவும் விரும்பத்தக்கதாகும். நீண்ட ஆயுள் உடையவரே, அவளிடம் இவ்வாறு சொல்லுங்கள்.”பெண்ணே, உன் கணவன் ராமகிரி ஆசிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை. என்னைப் பிரிந்து வாடும் உன்னிடம் அவர் குசலம் விசாரிக்கிறார். உனது தோழிகளின் முன்னிலையில் உரக்க சொல்லக்கூடியவைகளைக் கூட யாரொருவன் உன்னுடைய முகத்தைத் தீண்டுவதற்கு ஆசைப்பட்டு உன் காதோரம் வந்து சொல்லத் துணிந்திருக்கிறாரோ அவர் கேட்கவோ காணவோ முடியாத அளவுக்கு

தூரத்தில் வியாகூலப்பட்டு கட்டாயப்படுத்தி சொன்ன இந்த வார்த்தைகளை உன்னிடம் சொல்லுகிறேன்.