மேக சந்தேசம் பகுதியாக – 4

अप्यन्यस्मिन् जलधर महाकालमासाद्य काले

स्थातव्यं ते नयनविषयं यावदभ्येति भानु:

कुर्वन् सन्ध्यावलिपडहतां शूलिन: श्लाघनीयां

आमन्ध्राणां फलमविकलं लप्स्यसे गर्ज्जितानाम्                     36

 

पादन्यासक्वणितरशनास्तत्र लीलावधूतै:

रत्नच्छायाखचितबलिभि: चामरै: क्लान्तहस्ता:

वेस्यास्त्वत्तो नखपदसुखान् प्राप्य वर्षाग्रबिन्दू

नामोक्ष्यन्ति त्वयि मधुकरश्रेणिदीर्घान कडाक्षान्                   37

 

पश्चादुच्चैर्भुजतरु वनं मण्डलेनाभिलीन

स्सान्ध्यं तेज प्रतिनवजपापुष्परक्तं दधान:

नृत्यारंभे हर पशुपतेरार्द्रनागाजिनेच्छां

शान्तोद्वेगस्तिमितनयनं दृष्टभक्तिर्भवान्या:                            38

 

गच्छन्तीनां रमणवसतिं योषितां तत्र नक्तं

रुद्धालोके नरपतिपथे सूचिभेदैस्तमोभि:

सौदामिन्या कनकनिकषस्निग्द्धया दर्शयोर्वीं

 

तोयोत्सर्ग्गस्तनितमुखरो मा च भूर्विक्लवास्ता:                     39

तां कस्याञ्जित्भवनवलभौ सुप्तपारावतायां

नीत्वा रात्रिं चिरविलसनात् खिन्नविद्युत्कलत्र:

दृष्टे सूर्ये पुनरपि भवान् वाहयेदध्वशेषं

मन्दायन्ते न खलु सुहृदामभ्यंपेतार्त्थकृत्या:                          40

 

तस्मिन्काले  नयनसलिलं योषितां खण्डितानां

शान्तिं नेयं प्रणयिभिरतो वर्त्म भानोस्त्यजाशु।

प्रालेयास्रं कमलवदनात्सोऽपि हर्तु.नलिन्याः

प्रत्यावृत्तस्त्वयि कररुधि स्यादनल्पाभ्यसूयः॥  41

 

गम्भीरायाः पयसि सरितश्चेतसीव प्रसन्ने

छायात्मापि प्रकृतिसुभगो लप्स्यसे ते प्रवेशम्।

तस्मादस्याः कुमुदविशदान्यर्हसि त्वं न धैर्या-

न्मोघीकर्तुं चटुलशफरोद्वर्तनप्रेक्षितानि ॥          42

 

तस्याःकिञ्चित्करधृतमिव प्राप्तवानीरशाखं

हृत्वा नीलं सलिलवसनं मुक्तोरोधोनितम्बम्।

प्रस्थानं ते कथमपि सखे लम्बमानस्य भावि

ज्ञातास्वादो पुलिनजघनां को विहातुं समर्थः॥       43

சண்டேஸ்வரனுடைய அந்தக் ஆலயத்தில் கதிரவன் மறையும்வரை தாங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தால்

திரிசூலபாணியான அந்த இறைவனின் மாலைநேர அர்ச்சனையில் பெரும்பறை என்னும் மேளத்திற்குப் பதிலாகத் தங்களது இடி நாதத்தை முழக்குவதன்மூலம் முழுமையான பலனை அடையாலாம். அடையலாம். அங்கு, அடிவைத்து நடக்கும்போது அரைஞாணம் கிலுங்கிக்கொண்டும் இரத்தினங்கள் பதித்த சாமரங்களை சந்தனத்தில் தோய்த்து வீசும்போது கைகள் ஓய்ந்துபோவதாலும் வருந்தும் பரத்தையர் மீது நகக் கீற்றுபோல் புதுமழைத் துளிகள் தங்களிடமிருந்து விழும்போது கருவண்டுகளையொத்த அவர்களுடைய விழிகளைத் தங்கள் மேல் பதிப்பார்கள். இறைவனாகிய பசுபதி தனது தாண்டவத்தை ஆரம்பிக்கும்போது செம்பருத்திப்பூப் போலச் சிவந்த மாலைக் கதிரவனின் ஒளியைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு அங்குள்ள கைமரக்காட்டைச் சுற்றி வட்டமாக நின்று அச்சமின்றித் தங்களது பக்தியை இறைவன் காணுமாறு அவரை உற்றுப் பார்த்து அவருக்கு ஈரமான யானைத் தோல் வேண்டும் என்னும் அவரது அவாவினைப் பூர்த்தி செய்து கொடுக்கவும். இது மாலைநேர வீதிஉலா முடிந்தபின் நடைபெறும் பசுபதியின் தாண்டவத்தை விளக்குவதாகும். இரவு நேரத்தில் தலைவன் வீடு செல்லும் பெண்கொடிகளுக்கு ஊசித்துளையில் நுழையுமளவு போலும் வெளிச்சமில்லாத இருட்டில் , ராஜபாதையில் உரைகல்லில் கீறிய பொன்கோடு போல் மின்னும் தங்களது மின்னலால் வழி காண்பிக்க வேண்டும். அங்கே தாங்கள் மழையாகப் பொழிந்து இடியாக இடித்துக் கலவரம் உண்டாக்கக் கூடாது. அவர்கள் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள்.. அதிக நேரம் இவ்வாறு பயணம் செய்த தாங்கள் தங்களது பத்தினியாகிய மின்னலுடன் அந்த இரவைப் புறாக்கள் உறங்கும் ஏதேனும் ஒரு வீட்டின் உப்பரிகையில் கழித்துவிட்டுக் கதிரவன் உதித்ததும் மீண்டும் மேற்கொண்டு பயணத்தைத் தொடர்வீராக. உங்கள் நண்பனாகிய எனக்காக இந்த வேலையை ஏற்றுக் கொண்ட தாங்கள் விரைந்து செல்வதில் தாமதம் காட்ட மாட்டீர்கள் அல்லவா? அந்த விடியல் நேரம் காதலர்கள் தம் காதலியரின் கண்ணீரைத் துடைக்கும் நேரமாகும். எனவே சூரியக் கதிர்களின் பாதையைவிட்டு விரைவில் விலகிவிட வேண்டும். சூரியனும் பொய்கையிலுள்ள முகிழ ஆரம்பிக்கும் தாமரை மலர்களின் குளிர்முகங்களிளிருந்து பணித்துளிகளாகிய கண்ணீரைத் துடைப்பதற்காக மீண்டும் வந்திருப்பதால் தாங்கள் தங்களது கரத்தால் கதிரவனின் வருகையைத் தடுத்தால் அவருக்குக் கோபம் உண்டாகிவிடும். தெளிந்த மனம் போன்ற கம்பீரா நதியின் நீரில் இயற்கை எழில் மிக்க தங்களின் வடிவம் போலும் பதிந்துவிடும். ஆகவே அவளது ஆம்பல் பூவின் அழகுள்ள சுறுசுறுப்பான கரிய மீன்களின் குதிப்புகளான பார்வைகளைத் தங்களுக்குத் தைரியம் கிடைப்பதற்காகத் தவிர்த்துப் பாழாக்கக் கூடாது. மரக்கிளைகள் மூடியுள்ள அவளுடைய கறுப்பான நீராடையை பறித்து எடுத்துவிட்டு, என் நண்பரே, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு அவ்விடத்தை விட்டுப் போவது அவ்வளவு எளிதான காரியமல்ல.