மேக சந்தேசம் பகுதியாக – 10

अंगेनांगं सुतनु तनुना गाढतप्तेन तप्तं

सास्रेणाश्रुद्रुतमविरतोत्कण्ठमुत्कण्ठितेन

दीर्घोछ्वासं समधिकतरोछ्वासिना दूरवर्त्ती

सङ्कल्प्पैस्ते विशति विधिनावैरिणा रुद्धमार्ग:                      101

 

शब्दाख्येयं यदपि किल ते य: सखीनां पुरस्तात्

कर्ण्णे लोल: कथयितुमभूदाननस्पर्शलोभात्

सोतिक्रान्त: श्रवणविषयं लोचनाभ्यामदृश्य

स्त्वामुत्कण्ठाविरचितपदं मन्मुखेनेदमाह                             102

 

श्यामास्वंगं चकितहरिणीप्रेक्षणे दृष्टिपातं

गण्डछायां शशिनि शिखिनां बर्हभारेषु केशान्

उत्पश्यामि प्रतनुषु नदीवीचिषु भ्रूविलासान्

हन्तैकस्तं क्वचिदपि न ते चण्डि सादृश्यमस्ति                        103

 

त्वमालिख्य प्रणयकुपितां धातुरागैश्शिलाया

मात्मानं ते चरणपतितं यावदिछामि कर्त्तुं

अस्रैस्तावन्मुहुरुपचितैर्दृष्टिरालुप्यते मे

क्रूरस्तस्मिन्नपि न सहते संगमं नौ कृतान्त:                            104

 

धारासिक्तस्थलसुरभिणस्त्वन्मुखस्यास्य बाले

दूरीभूतं प्रतनुमपि मां पञ्चबाण: क्षिणोति

धर्मान्तेस्मिन् विगणय कथं वासराणि व्रजेयु:

दिक्संसक्तप्रविततघनव्यस्तसूर्यातपानि                                105

 

मामाकाशप्रणिहितभुजं निर्द्दयाश्लेषहेतो:

लब्धायास्ते कथमपि मया स्वप्रसन्दर्शनेषु

पश्यन्तीनां न खलु बहुशो न स्थलीदेवतानां

मुक्तास्थूलास्तरुकिशलयेष्वश्रुलेशा: पतन्ति                          106

 

भित्वा सद्य: किसलयपुटान् देवतारुद्रुमाणां

ये तत्क्षीरस्रुतिसुरभयो दक्षिणेन प्रवृत्ता:

आलिंगन्ते गुणवति मया ते तुषारार्द्रिवाता:

पूर्व्वं स्पृष्टं यदि किल भवेदंगमेभिस्तवेति                             107

 

संक्षिप्येत क्षणमिव कथं दीर्खयामा त्रियामा

सर्वावस्थास्वहरपि कथं मन्दमन्दातपं स्यात्

इत्थं चेतश्चटुलनयने दुर्ल्लभप्रार्थनं मे

गाढोष्णाभि: कृतमशरणं त्वद्वियगव्यथाभि:                          108

 

नन्वात्मानं बहु विगणयन्नात्मना नावलम्बे

तत् कल्याणि त्वमपि नितरां म गम: कातरत्वं

कस्यात्यन्तं सुखमुपगतं दु:खमेकान्ततो वा

नीचैर्ग्गचत्युपरि च दशा चक्रनेमिक्रमेण                               109

 

शापान्ते मे भुजगशयनादुत्थिते शार्ङ्गपाणौ

मासानेतान्  गमय चतुरो  लोचने मीलयित्वा

पश्चादावां विरहगुणितां तं तमात्माभिलाषं

निर्व्वेक्ष्याव: परिणतशरच्चन्द्रिकासु क्षपासु                            110

 

भूयश्चापि त्वमसि शयने कण्ठलग्ना पुरा मे

निद्रांगत्वा किमपि रुदति सत्वरं विप्रबुद्धा

सान्तर्हासं कथितमसकृत् पृच्छतस्य त्वया मे

दृष्ट: स्वप्ने कितव रमयन्  कामपि त्वं मयेति                          111

 

एतस्मान्मां कुशलिनमभिञ्जानदानाद्विदिता

मा कौलीनादसितनयने मय्यविश्वासिनी भू:

स्नेहानाहु: किमपि विरहव्यापदस्ते ह्यभोग्या

दृष्टे वस्तुन्युपचितरसा: प्रेमराशीभवन्ति                               112

 

किञ्चित् सौम्य व्यवसितमिदं बन्धुकृत्यं त्वया मे

प्रत्यादेशान्नखलु भवतो धीरतां तर्क्कयामि

निश्शब्दोहि प्रदिशसि जलं याचितश्चातकेभ्य:

प्रत्युक्तं तु प्रणयिषु सतामीप्सितार्थक्रियैव                             113

 

आश्वासैनां प्रथमविरहादुग्रशोकां सखीं मे

शैलादस्मात् त्रिनयनवृक्षोत्खातकूटान्निवृत्त:

साभिज्ञानप्रहितकुशलै: तद्वचोभिर्ममापि

प्रात: कुन्दप्रसवशिथिलं जीवितं धारयेथा:                            114

 

एतत्कृत्वा प्रियमनुचितप्रार्थनावर्त्तिनो मे

सौहार्द्राद्वा विधुर इति वा मय्यनुक्रोशबुद्ध्या

इष्टान्देशाज्जलद विचर प्रावृषा संभृतश्री

र्मा भूदेवं क्षणमपि च ते विद्युता विप्रयोग:                            115

 

श्रुत्वा वर्त्तां जलदकथितां तांधनेशोपि सद्य:

शापस्यान्तं सदयहृदय: संविधायास्तकोप:

संयोज्यैतो विगलितशुचौ दम्पती हृष्टचित्तौ

भोगानिष्टानविरतसुखं भोजयामास शश्वत्                           116

உனது உடலை நாவல்கொடிகளாகவும் பார்வையைப் பயம்கொண்ட பெண்மானின் விழிகளாகவும் கன்னங்களின் ஒளியை சந்திரனின் ஒளியாகவும் புருவங்களின் அசைவுகளை ஆற்றின் சிற்றலைகளாகவும் நான் உவமித்தேன் என்றாலும் அவைகளில் உனது சாயல் ஒன்று சேர்ந்து காணப்படவில்லை. பாறையின்மேல் தாதுச் சாயங்களைக் கொண்டு உன்னைப் பொய்க்கோ[பம் கொண்டவளாக வரைந்து என்னை உன் காலடியில் விழுந்து கிடக்கும் நிலையில் வரைய வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் வற்றாது வெளிவருகின்ற கண்ணீரால் எனது பார்வை மூடிப் போகிறது. கொடியவனான விதிக்கு அங்கும் நாம் இணைவது பொறுக்கவில்லை. எப்போதாவது உண்டாகும் கனவுக் காட்சிகளில் என் கையில் அகப்பட்டுள்ள உன்னை இறுகத் தழுவுவதற்காக ஆகாயத்தை நோக்கிக் கைகளை நீட்டிக் கொண்டு படுத்திருக்கும் என்னைப் பார்க்கும் வன தேவதைகளின் முத்துமணிகளைப் போன்ற கண்ணீர்த் துளிகள் இடைவிடாது மரங்களின் தளிர் இலைகளின்மேல் விழாமல் இருப்பதில்லை. தேவதாரு மரங்களின் இளம் கூம்புகளை விரியச் செய்து அந்த மரங்களின் சாறினால் நறுமணம் பூண்டு தென்திசை நோக்கி வீசுகிற இமயமலைக் காற்றுகளை இவை முன்னரே உன்னுடைய உடலைத் தொட்டிருக்கலாம்என்று ஆசைப்பட்டு நான் அவைகளை ஆலிங்கனம் செய்வதுண்டு. ஏ, கல்யாணி, நீ அதைரியப் படலாகாது. எப்போதும் சுகமும் எப்போதும் துக்கமும் யாருக்கு வந்திருக்கிறது? வாழ்க்கையானது சக்கரம் சுழளுவதுபோலக் கீழும் மேலுமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீ மகாவிஷ்ணு தனது யோக நித்திரையிலிருந்து எழுந்து விட்டால் என்னுடைய சாபம் முடிந்துவிடும். அவ்வளவு மாதங்கள் நீ கண்ணை மூடிக்கொண்டு காலத்தைக் கழிப்பாயாக. அதன்பிறகு நமக்குப் பிரிவுத்துயரம் மூலம் அதிகரித்துள்ள நம் ஒவ்வொருவரது அவாக்களையும் சரத் காலத்தின் முழுநிலவுள்ள இரவுகளில் நம்மால் இயன்றவரை அனுபவித்துத் தீர்க்கலாம். ஏ மேகமே, தாங்கள் எனக்காக இந்த உறவு வேலையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? உசிதமல்லாத ஒரு விண்ணப்பத்துடன் வந்துள்ள என்னுடைய இந்த விருப்பத்தை நட்புக்காகவோ பிரிவினால் வாடுபவனாயிற்றே என்னும் கருணையாலோ நிறைவேற்றிய பின்னர் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கெல்லாம் செல்லுங்கள். இது போலத் தங்களுக்கும் மின்னல்கொடியுடன் க்ஷண நேரமாவது பிரிவதற்கான சந்தர்ப்பம் வராமல் இருக்கட்டும்.

இவ்விதமாக அந்த யக்ஷன் மேகத்திடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பாராமலேயே அதனிடம் நன்றியுள்ளவனானான்
பிரபஞ்சத்தில் பிரிவுத் துயரம் என்பது மனிதனுக்கு மாத்திரமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் உள்ளதல்லவா? நதிகளும் குன்றுகளும் அன்னப்பறவைகளும் மழையும் இந்தக் காவியத்தில் காதலின் பிரதிபிம்பங்களாகும். கால தேசங்களுக்கும் அப்பால் பிரிவுத் துயரால் வாடும் ஒவ்வொரு மனதினுடையவும் துணையாகி, மேகம் இப்பொழுதும் நிலை கொள்கிறது.