மேக சந்தேசம் பகுதியாக – 7

विद्युत्वन्तमं ललितवनितस्सेन्द्रचापं सचित्रा-

स्संगीताय प्रहतमुरजा: स्निग्धगम्भीरघोषम् ।

अन्तस्तोयं मणिमयभुवस्तुङगमभ्रंलिहग्रा:

प्रासादास्त्वां तुलयितुमलं यत्र तैस्तैर्विशेषै:॥  66

 

हस्ते लीलाकमलमलके बालकुन्दानुविद्धं

नीता लोध्रप्रसवरजसापाण्डुतामाननश्री ।

चूडापाशे नवकरुवकं चारुवर्णे शिरीषं

सीमन्ते च त्वदुपगमजं यत्र नीपं वधूनाम्॥ 67

 

यस्याम यक्षा: सितमणि मयानेत्या हर्म्य स्थलानि

ज्योतिच्छाया कुसुमखाचितांन युत्तामास्त्रीसहाया:

आसेवन्ते मधु रतिफल कल्पवृक्षाप्रसूतम

त्वदगम्भीरध्वनिषु शनकै  पुष्करे श्वाहातेषु 68

 

गत्यूलकंपादलकापतितेर्यात्रा  मन्दारपुष्पैः

क्लिप्त छेदे कनक नलिने कर्ण विभ्रम सिभिशच

मुक्ताजा लै स्तन परिसर छीन्न सुत्रैशच हारे

नै शो मार्ग सतविदुरुदये सू च्यते कामिनीनां 69

 

नीवीबन्धोच्छ्वसितशिथिलं यत्र यक्षाङ्गनानां

वासः कामादनिभृतकरेषु आक्षिपत्सु प्रियेषु।

अर्चिस्तुंगानभिमुखगतान् प्राप्य रत्नप्रदीपान्

ह्रीमूढानां भवति विफलप्रेरणा चूर्णमुष्टिः॥ 70

 

नेत्रा नीता: सततगतिना ये विमनाग्रभूमी-

रालेख्यानां  सजलकणिका दोषमुत्पाद्य सद्य:।

शङ्कास्पृष्टा इव जलमुचस्त्वादृशा यत्रजालैः

धूमोद्गारानुकृतिनिपुणा जर्जरा निष्पतन्ति॥  71

 

यत्र स्त्रीणां प्रियतमभुजोच्छ्वासितालिह्गितानां

अङ्गग्लानिं सुरतजनितां तन्तुजालावलम्बाः।

त्वत्संरोधापगमविशदैः प्रेरिताश्चन्द्रपादैर्-

व्यालुम्बन्ति स्फुटजललवस्यन्दनश्चन्द्रकान्ताः॥  72

 

नत्वा देवं धनपतिसखं यत्र साक्षात्वसन्तं

प्रायश्चापं न वहति भयान्मन्मथः षट्पदज्यम्।

सभ्रूभङ्गप्रहितनयनैः कामिलक्ष्येष्वमोखै:

तस्यारम्बश्चटुलवनिताविभ्रमैरेव सिद्धः॥  73

 

तत्रागारं धनपतिगृहादुत्तरेणास्मदीयं

दूराल्लक्ष्यं सुरपतिधनुश्चारुणा तोरणेन।

यस्योद्याने कृतकतनयः कान्तया वर्द्धितो मे

हस्तप्राप्यस्तवकनमितो बालमन्दारवृक्षः॥  74

 

वापी चास्मिन् मरकतशिलाबद्धसोपानमार्गाः

हेमैच्छन्ना कमलमुकुलैः स्निग्धवैडूर्यनालैः।

यस्यास्तोये कृतवसतयो मानसं सन्निकृष्टं

न ध्यास्यन्ति व्यपगतशुचस्त्वामपि प्रेक्ष्य हंसाः॥ 75

 

तस्यास्तीरे रचितशिखरः पेशलैरिन्द्रनीलैः

क्रीडाशैलः कनककदलीवेष्टनः प्रेक्षणीयः।

मद्गेहिन्याः प्रिय इति सखे चेतसा कातरेण

प्रेक्ष्यापान्तस्फुरिततटितं त्वां तमेव स्मरामि॥  76

 

रक्ताशोकश्चलकिसलयः केसरश्चात्र कान्तः

प्रत्यासन्नः कुरुवकवृत्तेर्माधवीमण्डपस्य।

एकस्सख्यास्तव सहमया वामपादाभिलाषी

काङ्क्षत्यन्यो वदनमदिरां दोहदछद्मनास्याः॥  77

அளகாபுரியிலுள்ள விண்ணைத் தொடும் மாடமாளிகைகள் தங்களுடைய ஒவ்வொரு விதமான சிறப்புகளால் தங்களுடன் ஒப்பிடத் தகுதியுடையவையாகும். மின்னலையொத்த அழகிய மங்கையர் உள்ளதாலும் வானவில் போன்ற நிறமுள்ள சித்திரங்கள் உள்ளதாலும் அடைமழையுடன் கூடிய இடியோசை இசைக்கான மேளம் அடிப்பது கொண்டும் தங்களது உள்நீரொத்த நீருடன்கூடிய மணிமயமான நிலங்கள் உள்ளதாலும் அது தங்களுக்கு ஒப்பானது என்பது இதன் பொருளாகும். அங்குள்ள அழகிய பெண்மணிகளின் கைகளில் தாமரை மலர்கள் இருக்கின்றன, அவர்களுடைய, கரும்கூந்தல் நிரைகளில் முல்லைப்பூக்களை சூடியுள்ளனர், காதுகளில் நல்ல நென்மேனி வாகைப் பூக்களை அணிந்துள்ளார்கள் நெற்றி வகிட்டில் தங்களது வருகையால் கிடைத்த கடம்ப மலர்களும் உண்டு. அவர்களது முக அழகு ஒருவிதமான மலர்ப் பொடியால்

வெண்மையாக்கப்பட்டதாகும். அவர்களது நீண்ட கூந்தலைப் புத்தம்புது சிவப்புக் குறிஞ்சி மலர்கள் அலங்கரிக்கின்றன. அங்கே யக்ஷர்கள் உத்தம மங்கையருடன் சேர்ந்து வெண்மை நிறமார்ந்ததும் நட்சத்திரப் பூக்கள் விரிந்தவையுமான வெண் மாடங்களில் சென்று அமர்ந்துகொண்டு, தாங்களுடைய ஒலியைப் போன்ற கம்பீரமான ஒலியை எழுப்புகின்ற மேளக் கருவிகள் மெதுவாக முழங்கிக் கொண்டிருக்க, கற்பக விருட்சங்களிலிருந்து எடுக்கப்பட்டதும் காம இச்சையை விளைவிப்பதுமான மதுவை அருந்துகிறார்கள். அங்கே கைலாசத்தில் தனபதியின் நண்பனாகக் கண்கூடாக வாழ்ந்தருளுகின்ற தேவனை எண்ணிப் பயந்து மன்மதன் வண்டுகளாலாகிய நாணோடுகூடிய தனது வில்லை எடுப்பதில்லை என்று தோன்றுகிறது. அங்கே குபேரனின் அரண்மனையின் வடக்காக அமைந்துள்ள எங்களது இல்லம் தங்களது வானவில்லைப் போன்ற மனோகரமான தோரணங்களால் அலங்கரிக்க்கப்பட்டிருப்பதைத் தூரத்திலிருந்தே தங்களால் காண இயலும். அதன் நந்தவனத்தில் பூக்குலைகளால் சிரம் தாழ்த்தி நிற்கிற எங்களது தத்துபுத்திரனைப் போன்றஒரு மந்தாரச் செடி இருக்கிறது. அங்கே மரகதப் பாறைகளாலான படிக்கட்டுகளைக் கொண்ட நீளமான வைடூரியத் தண்டுகளின்மேல் பொன் தாமரை மொட்டுக்கள் முட்டி நிற்பதுமான ஒரு குளமும் இருக்கிறது. அதன் கரையில் மினுத்த மினுமினுக்கும் இந்திரநீலக் கற்களாலாகிய கொடுமுடியோடும் பொன் வாழைகளால் சூழப்பட்டுக் கண்ணுக்கு இனிமையான ஒரு சிறு குன்று உள்ளது. நண்பரே, சுற்றும் மின்னலால் சூழப்பட்டுள்ள தங்களைக் காணும்போது நடுங்கும் இதயத்துடன் “ அது என் மனைவிக்கு மிகவும் விருப்பமுள்ளதாயிற்றே” என்று நான் அதையே நினைக்கிறேன். அந்த விளையாட்டுக் குன்றின்மேல் செந்நிற குறிஞ்சிகளால் ஆகிய வேலியுள்ள முல்லை மேடைக்கு அருகில் ஒரு பொன் அசோக மரமும் அழகான ஒரு இலஞ்ஞி இலஞ்சி மரமும் உள்ளன. அவைகளில் ஒன்று உரம் என்னும் பெயரில் தங்களது துணைவியின் இடதுகாலால் மிதிபடுவதற்காகக் காத்திருக்கிறது. இன்னொன்று உரம் என்னும் பெயரில் இவள் என்னுடன் பகிர்ந்துகொண்ட மதுவை நாடுகிறது.