மேக சந்தேசம் பகுதியாக – 5

त्वन्निष्यन्दोच्वसितवसुधागन्धसम्पर्करम्य-

श्रोतोरन्ध्रध्वनिितसुभगं दन्तिभिः पीयमानः

नीचैर्वास्यत्युपजिगमिषोर्देवपूर्वं गिरिं ते

शीतो वायुः परिणमयिता काननोदुम्बराणाम्॥     44

 

तत्र स्कन्दं नियतवसतिं पुष्पमेघीकृतात्मा

पुष्पासारैः स्नपयतु भवान्व्योमगंगाजलार्द्रैः।

रक्षाहेतोर्नवशशिभृता वासवीनां चमूना-

मत्यादित्यं हुतवहमुखे संभृतं तद्धि तेजः॥    45

 

ज्योतिर्लेखावलयि गलितं यस्य बर्हे भवानी

पुत्रप्रेम्णा कुवलयदलप्रापि कर्णे करोति।

धौतापाङगं हरशशिरुचः पावकेस्तं मयूरं

पपश्चादद्रिग्रहणगुरुभिर्गर्जितैर्नर्तयेथाः॥  46

 

आराध्यैनं सरवणभवं देवमुल्लङ्घिताध्वा

सिद्धद्वन्दवै्र्जलकणभयाद्वीणिभिर्मुक्तमार्गः।

व्यालम्बेथाः सुरभितनयालम्भजां मानयिष्यन्

स्रोतोमूर्त्त्या बुवि परिणतां रन्तिदेवस्य कीर्तिम्॥ 47

 

त्वय्यादातुं जलमवनते शार्ङगिणो वर्णचोरैः

तस्याः सिन्धोः पृथुमपि तनुं दूरभावात्प्रवाहम्।

प्रेक्षिष्यन्ते गगनगतयो नूनमावर्ज्य दृष्टी-

रेकं मुक्तागुणमिव भुवः स्थूलमध्येन्द्रनीलम्॥  48

 

तामुत्तीर्य व्रज परिचितभूलताविभ्रमाणां

पक्ष्मोत्क्षेपादुपरिविलसत्कृष्णसारप्रभाणाम्।

कुन्दक्षेपानुगमधुकरश्रीमुषामात्मबिम्बं

पात्रीकुर्वन् दशपुरवधूनेत्रकौतूहलानाम्॥    49

 

ब्रह्मावर्तं जनपदमथच्छायया गाहमानः

क्षेत्रं क्षत्रप्रधनपिशुनं कौरवं तद्भजेथाः।

राजन्यानां शितशरशतैर्यत्रगाण्डीवधन्वा

धारापातैस्त्वमिवकमलान्यभ्यवर्षन्मुखानि॥  50

 

हित्वा हालादभिमतरसां रेवतीलोचनाङ्कां

बन्धुप्रीत्या समरविमुखो लाङगली याः सिषेवे।

कृत्वा तासामभिगममपां सौम्यसारस्वतीना-

 

मन्तःशुद्धस्त्वमपि भविता वर्णमात्रेण कृष्णः॥ 51

तस्माद्गच्छेरनुकनखलं शैलराजावतीर्णां

जह्नोः कन्यां सगरतनयस्वर्गसोपानपङ्क्तिम्।

गौरीवक्त्रे भ्रुकुटिरचनां या विहस्येव फेनैः

शंम्भोः केशग्रहणमकरोदिन्दुलग्नोर्मिहस्ता॥   52

 

तस्याः पातुं सुरगज इव व्योम्नि पश्चार्धलम्बी

त्वं चेदच्छस्फटिकविशदं तर्कयेस्तिर्यगम्भः।

संसर्पन्त्या सपदि भवतः स्रोतसि छाययाऽसौ

स्यादस्थानोपगतयमुनासङगमेवाभिरामा॥       53

 

आसीनानां सुरभितशिलं नाभिगन्धैर्मृगाणां

तस्या एव प्रभवमचलं प्राप्य गौरं तुषारैः।

वक्ष्यस्यध्वश्रमविनयने तस्यश्रृङगे निषण्णः

शोभां शुभ्रत्रिनयनवृषोत्घातपङ्कोपमेयाम्॥       54

 

தாங்கள் தூவுகின்ற மழையை ஏற்றுக்கொண்டு பெருமூச்சு விடுகின்ற மண்ணின் மணம்கொண்ட யானைகள் தம் தும்பிக்கைகளின் உட்புறமாக காற்றை உறிஞ்சும்போது ஏற்படுகிற இனிமையான இரைச்சலைப் போன்ற சத்தத்துடன் கூடிய குளிர்காற்று தேவகிரியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் உங்களது கீழாக வீசிக் கொண்டிருக்கும். அவ்விடத்தைத் தனது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டிருக்கும் ஸ்கந்தனை தாங்கள் நேரடியாகவே விண்ணாற்றின் நீரால் நனைத்த பூக்களால் முறைப்படி நீராட்ட வேண்டும். எந்த மயிலின் ஒளிரும் கோடுகளாலான மண்டலங்களுடன் கூடிய உதிர்ந்துபோன இறகுகளை பவானி தேவியானவள் தனது தாயன்பின் காரணமாக தனது காதோரமாக சூடியுள்ள கருங்குவளை மலர்களைத் தள்ளிவிட்டு அவைகளுக்குப் பதிலாக இவைகளை சூடுகிறாளோ, சிவனின் திருமுடியில் இருக்கும் சந்திரனின் கள்ளப் பார்வையால் கழுவப்பட்டுத் தெளிவடைந்த கண்களுடன்கூடிய அந்த கந்த மயிலை பின்னால் உள்ள மலையில் உண்டாக்கும் உரத்த இடியோசையால் நடனமாடச் செய்ய வேண்டும். இவ்வாறு சரவணப் பொய்கையில் அவதரித்த கந்தப் பெருமானை ஆராதனை செய்து பின் வீணை ஏந்திய சித்த தம்பதிகள் வீணையின்மேல் நீர்த்துளி விழுந்துவிடுமோ என்று பயந்து தள்ளி நிற்கவே மேலும் முன்னே சென்று மாடுகளை வெட்டிப் பலியிட்டதன்மூலம் உண்டாகிய நதியாகிய ரந்தி தேவனின் புகழை, அதாவது சர்மன்வதி நதியை ஆதரிப்பதற்காகக் கீழே இறங்க வேண்டும். அதையும் கடந்து போகும்போது புருவ அசைவுகள் பயின்றுள்ள, இமைகளை உயர்த்தி மேலே பார்க்கும்போது வெண்மை நிறமார்ந்த முல்லை மலர்களை வாரி இரைக்கும்போது அவைகளுடனேயே பறந்து வருகிற வண்டுகளையொத்த அழகிய கண்களையுடைய தசப்பூர நாட்டுப் பெண்கொடிகளின் கண்களின் முகபாவங்களுக்கு தங்களது உடலை பாத்திரமாக்கிக் கொண்டு செல்வீராக. பின்னர், பிரம்மாவர்த்தம் என்னும் ஜனபதத்தில் தங்களது நிழலை விழச் செய்து முன்பு க்ஷத்திரியர்கள் போர் செய்ததன் அறிகுறியாக விளங்கும் குருக்ஷேத்திரத்திற்குப் போவீராக. அந்த இடத்தில்தான் தாங்கள் தாமரை மலர்களில் நீர்த்தாரைகளைப் பெய்ததைப் போல காண்டீவி தனது நூற்றுக் கணக்கான கூரம்புகளை மன்னர்களின் முகங்களில் எய்தாள். தனது உற்றார் உறவினரோடுள்ள பாசத்தின் காரணமாகப் போரினின்று பின்வாங்கிய பலராமன் தனக்கு மிகவும் விருப்பமானதும் ரேவதியின் விழிகள் பதிந்ததுமான மதுவை விட்டு எந்தப் பானத்தைப் பருகினாரோ அந்த சரஸ்வதி நதியின் தீர்த்தமாகிய நீரைத் தாங்கள் உட்கொண்டால் தங்களது மனம் தெளிவடைந்து தாங்கள் உடலால் மட்டும் கறுப்பு நிறம் கொண்டவராக இருப்பீர்கள். அங்கிருந்து தாங்கள் இமயத்திலிருந்து இறங்கி சகர புத்திரர்களுக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் படிகளாக மாறிய ஜாஹ்னவிக்குச் செல்லுங்கள். அவள் கௌரியின் முகத்தில் புருவங்கள் நெறிவதை நுரைகளால் பரிகாசம் செய்வதைப்போல் பகவான் சம்புவின் சடைமுடியின் மேல் இருக்கும் நிலாக் கீற்றின்மேல் தன்னுடைய திருக் கரங்களைப் பதித்து சம்புவின் தலைமுடியைப் பிடித்தவளாவாள்.

அதன் பரிசுத்தமான நீரைப் பருகுவதற்காகத் தாங்கள் ஒரு விண்யானையைப் போல தங்களுடைய உடலின் பின்பகுதியை ஊன்றி நின்று பார்த்தீர்களானால் நீரோட்டத்தில் காணும் தங்களது நிழலால் அவள், திடீரென்று பொருத்தமில்லாத இடத்தில் வந்து சேர்ந்த யமுனா நதியுடன் இணைந்ததால் அழகுபெற்றவளைப் போல் அழகுடன் திகழ்வாள். அவள் உற்பத்தியான இடமும் அவ்விடத்தில் தங்கிச் சென்ற கஸ்தூரி மான்களின் நாபியிலிருந்து எழும் சுகந்ததினால் பரிமளம் மிக்கதாகவும் பனிப் பரப்பினால் வெண்மை நிறமானதுமாக இருக்கும். இமயமலைக்குச் சென்று ஓய்வெடுக்கும் தாங்கள் முக்கண்ணனின் வெண்மையான காளையைப் போன்ற அழகினைப் பெறுவீர்கள்.