மேக சந்தேசம் பகுதியாக – 3

पाण्डुच्छायोपवनवृतय: केतकैस्सूचिभिन्नै:

नीडारम्भे गृहबलिभुजां आकुलग्रामचैत्या:

त्वय्यासन्ने फलपरिणतिश्यामजम्पूवनान्ता:

सम्पत्स्यन्ते कतिपयदिनस्थायिहम्सा दश्शार्णा:                    25

 

तेषां दिक्षु प्रथितविदिशालक्षणां राजधानीं

गत्वा सद्य: फलमतिमहत् कामुकत्वस्य लब्धा

तीरोपान्तस्तनितसुभगं पास्यसि स्वादुयुक्तं

सभ्रूभंगं मुखमिव पयो वेत्रवत्याश्चलोर्म्या:                            26

 

नीचैराख्यां गिरिमधिवसेस्तत्र विश्रामहेतो:

त्वत् सम्पर्कात् पुलकितमिव प्रौढपुष्पै: कदम्बे

य: पण्यस्त्रीरतिपरिमलोद्गारिभिर्नागराणां

उद्दामानि प्रथयति शिलावेश्मभिर्योवनानि                           27

 

विश्रान्तस्सन् व्रज वननदीतीरजातानि सिञ्ज

न्नुद्यानानां नवजलकणै: यूथिकाजालकानि

गण्डस्वेदापनयनरुजाक्लान्तकर्णोत्पलानां

छायदानात् क्षणपरिचित: पुष्पलावीमुखानाम्                      28

 

वक्र: पन्था यदपि भवत प्रस्थितस्योत्तराशां

सौधोत्संगप्रणयविमुखो मा च भूरुज्जयिन्या:

विद्युद्दामस्फुरणचकितैस्तत्र पौरांगनानां

लोलापांगैर्यदि न रमसे लोचनैर्वञ्जितोसि                             29

 

वीचिक्षोभस्तनितविहगश्रेणिकाञ्जीगुणाया:

संसर्प्पन्त्या: स्खलितसुभगं दर्शितावर्त्तनाभे:

निर्विन्ध्याया: पथि भव रसाभ्यन्तर: सन्निपत्य

स्त्रीणामाद्यं प्रणयवचनं विभ्रमो हि प्रियेषु                            30

 

वेणीभूतप्रतनुसलिला तामतीतस्य सिन्धु:

पाण्डुच्छाया तटरुहतरुभ्रम्शिभि: शीर्ण्णपर्ण्णै:

सौभाग्यं ते सुभग विरहावस्थया व्यञ्जयन्ती

कार्श्यं येन त्यजति विधिना स त्वयैवोपपाद्य:                        31

 

प्राप्यानवन्तीमुदयनकथाकोविदग्रामवृद्धान्

पूर्वोद्दिष्टामनुसर पुरीं श्रीविशालां विशालां

स्वल्प्पीभूते सुचरितफले स्वर्ग्गिणां गां गतानां

शेषै: पुणै: कृतमिव दिव: कान्तिमत् खण्टमेकम्                     32

 

दीर्घीकुर्व्वन् पटुमदकलं कूजितं सारसानां

प्रत्यूषेषु स्फुडितकमलामोदमैत्रीकषाया:

यत्र स्त्रीणां हरति सुरतग्लानिमंगानुकूल:

शिप्रावात: प्रियतम इव प्रार्थनाचाडुकार:                             33

 

जालोद्गीर्णैरुपचितवपु: केशसंस्कारधूपै:

बन्धुप्रीत्या भवनशिखिभिर्द्दत्तनृत्योपहार:

हर्म्येष्वस्या: कुसुमसुरभिष्वध्वखिन्नान्तरात्मा

नीत्वा खेदं ललितवनितापादरागाङ्कितेषु                           34

 

भर्त्तु: कण्ठच्छविरिति गणै: सादरं वीक्ष्यमाण:

पुण्यं यायास्त्रिभुवनगुरोर्धाम चण्ढेश्वरस्य

धूतोद्यानं कुवलयरजोगन्धिभिर्गन्धवत्या:

तोयक्रीडाविरतयुवतिस्नानतिक्तैर्मरुद्भि:                               35

தாங்கள் எனது நாட்டை நெருங்கும்போது தசார்ண தேசம் என்னும் ஒரு நாடு தாழம்பூக்களும் கிராமிய மரங்களும் காட்டு எல்லைப் பகுதிகளில் காய்கள் கனிந்து கறுப்பு நிறமாகிய நாவல் மரங்களும் அன்னப் பறவைகளும் நிறைந்ததாகக் காணப்படும். விதிஸா என்னும் பெயரால் நாடெங்கும் புகழ் பெற்ற அந்நாட்டின் தலைநகரத்தை சென்றடைந்தால் தாங்கள் காதலின் உன்னதமான பலனை அடையலாம். எவ்வாறெனில் அலைகள் அசைந்தாடும் வேத்ரவதி நதியின் கவர்ச்சிகரமான ருசிமிக்க நீரை வளைந்த புருவங்களுள்ள முகத்தைப் பருகுவதுபோலத் தங்களுக்குப் தாங்களும் பருகலாம். பின்னர் சிறிது ஓய்வுடுத்துக் கொள்வதற்காக மொட்டிட்ட கடம்ப மரங்களினூடே தங்களது தொடர்பால் மயிர்க்கூச்செறிந்தது போலான ‘நீசைஸ்’ என்னும் மலையின் மேல் சென்று அமரலாம். அவ்வாறு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு காட்டருவிகளின் கரைகளில் அமைந்துள்ள பூந்தோட்டங்களுக்கு புது நீர்த்துளிகள் கொண்டு முல்லை மலர் மொட்டுகளை வழங்கி, தமது கன்னங்களில் உண்டாகும் வியர்வையைத் துடைப்பதால் வாடிக் கசங்கிய கர்ணோத்பல மலர்களைப் பறிக்கிற மெல்லியலாரது முகங்களுக்குத் தணல் அளித்து அவர்களுடன் சிறிது இடைபழகி, அங்கிருந்து மேலும் பயணத்தைத் தொடருங்கள். வடக்குத்திசை நோக்கிப் போகும் தங்களுடைய வழி சிறிது வளைந்ததாக இருந்தாலும் பரவாயில்லை, உஜ்ஜயினி நகரின் மாட மாளிகைகளுடன் உறவாடுவதைத் தாங்கள் தவிர்க்க வேண்டாம். அங்கே மின்னலடிப்பதைக் கண்டு பயந்து நடுங்கிய அம் மாநகரத்தின் அழகிகளின் கடைக்கண் பார்வையைத் தாங்கள் அனுபவிக்கவில்லை எனில் அது மிக்க ஏமாற்றம் தருவதாக இருக்கும். மேகங்களின் வழியையும் தாண்டி

வானளாவிய உஜ்ஜயினியின் மாளிகைகளில் சென்று சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அலைகளின் ஓசைக்கிடையே அரைஞாணம் போலக் கிரீச்சிட்டுப் பறக்கின்ற பறவைக் கூட்டத்தின் அழகில் மயங்கி நடக்கும்போது நிர்விந்தியா என்னும் நதியின் நாபியாகிய நீர்ச்சுழலிலிருந்து வெளிப்படுகிற நீரின் வழியில் குறுக்கிட்டு அந்த நீரைப் பருகிக் கொள்ளவும். காதலனைக் கண்டதும் நாணத்துடன் ஒதுங்கிப் போவது பெண்களின் காதல் அறிவிப்பின் முதலாவது படியல்லவா?. இந்த இடத்தையும் கடந்து சென்றால் ஒற்றை வரியாகச் சுருங்கிய நீர் ஒழுக்குடன் கரையிலுள்ள மரங்களின் காய்ந்த இலைகள் உதிர்ந்து விழுந்து தனது மேற்பரப்பை மூடியிருகிற, தங்களால் கிடைத்த சௌபாக்கியங்களை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிற, ஸிந்து நதியின் நலிவை அகற்ற என்ன செய்ய வேண்டுமோ அதைத் தாங்கள் செய்யத்தான் வேண்டும். கடுமையான வேனிற்காலத்திலும் நுரைத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஓடுகிற நிர்விந்தியாவில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு அதற்கு அப்பால் உள்ள சிந்து நதிக்குத் தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் உத்தேசம். பிறகு உதயணனின் கதை சொல்வதில் மிகுந்த திறமைசாலிகளான மூதாட்டிகளின் நாடாகிய மாளவத்திற்குப் போய் அங்கிருந்து, தாம் செய்த புண்ணியத்தின் பலன் குறைந்து இனி மீதியுள்ள புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக பூமிக்கு வருகின்ற சொர்க்கலோக வாசிகளுக்காக உண்டாக்கப்பட்ட ஒளி மிகுந்த ஒரு சிறு சொர்க்கம் போல் இருப்பதும் ஐஸ்வர்யங்கள் நிறைந்ததுமான, நான் முன்பு கூறிய உஜ்ஜயினி நகரத்திற்குச் சென்று சேருங்கள். இவ்வளவு தூரம் தாண்டிக் களைப்படைந்துள்ள தாங்கள் அங்கிருக்கும் பெண்கள் தங்கள் தலைமுடிக்குப் போடும் தூபத்தினால் உடல் பருத்தும் அங்கு வளர்த்தப்படும் மயில்கள் தங்கள் இணைகளுடன் ஆடும் நடனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டும், தாம் அணிந்துள்ள மலர்களால் மணம்மிக்க வர்களாகிய அழகிய பெண்கொடிகளின் காலில் தேய்த்துள்ள செம்பஞ்சுக் குழம்பினால் காலடிகளின் அடையாளம் பதிந்துள்ளவையுமான அரண்மனைகளில் அமர்ந்து சோர்வு நீங்கப் பெற்றபின் கந்தவதி நதியிலிருந்து எழும் கருங்குவளை மலர்களின் நறுமணத்தையும் நீர் விளையாட்டுகள் முடிந்து கரையேறும் இளம்பெண்களின் கடுத்த மணத்தையும் ஏந்தி வரும் தென்றல் காற்றுகள் ஒன்றாக வீசுகிற பூந்தோட்டத்துடன் கூடிய மூவுலகத்திற்கும் குருவாகிய சண்டேஸ்வரனின் திருக்கோவிலுக்கு,” இந்த மேகம் நமது ஸ்வாமியின் திருக் கழுத்தின் நிறமுள்ளதாக இருக்கிறதே”, என்று பூத கணங்களால் ஆதரவுடன் பார்க்கப்பட்டு செல்லுங்கள். இத்தனை தூரம் பயணித்துக் களைப்படைந்திருக்கும் தாங்கள் அங்குள்ள மாளிகைகளில் அமர்ந்து களைப்பாற்றிக்கொண்ட பின் மூவுலகத்திற்கும் குருவாகிய சண்டேஸ்வரனின் ஆலயத்திற்கு ஆதரவுடன் செல்லுங்கள் என்பது இதன் பொருளாகும்.