மேக சந்தேசம் பகுதியாக – 1

कश्चित् कान्ताविरहगुरुणा स्वाधिकारप्रमत्त:

शापेनास्तं गमितमहिमा वर्षभोग्येन भर्तु:

यक्षश्चक्रे जनकतनयास्नानपुण्योदकेषु

स्निग्द्धच्छयातरुषु वसतिं रामगिर्याश्रमेषु                             1

 

तस्मिन्नद्रौ कतिचिदबलाविप्रयुक्त: स कामी

नीत्वा मासान् कनकवलयभ्रंशरिक्तप्रकोष्ठ:

आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानुं

वप्रक्रीडापरिणतजगजप्रेक्षणीयं ददर्श्                                  2

 

तस्य स्थित्वा कथमपि पुर: केतकाधानहेतो:

अन्तर्बाष्प: चिरमनुचरो राजराजस्य दध्यौ

मेघालोके भवति सुखिनोपि अन्यथावृत्ति चेत:

कण्ठाश्लेषप्रणयिनि जने किं पुनर्दूरसम्स्थे                              3

 

प्रत्यासन्ने नभसि दयिताजीवितालंबनार्त्थी

जीमूतेन स्वकुशलमयीं हारयिष्यन् प्रवृत्तीं

स प्रत्यग्रै: कुटजकुसुमै: कल्पितार्घाय तस्मै

प्रीत: प्रीतिप्रमुखवचनं स्वागतं व्याजहार                             4

 

धूमज्योति: सलिलमरुतां सन्निपात: क्व मेघ:

सन्देशार्त्थ: क्व पटुकरणै: प्राणिभि: प्रापणीया:

इत्यौत्सुक्यादपरिगणयन् गुह्यकस्तं ययाचे

कामार्त्ता हि प्रकृतिकृपणाश्चेतनाचेतनेषु                               5

 

जातं वंशे भुवनविदिते पुष्करावर्तकानां

जानामि त्वां प्रकृतिपुरुषं कामरूपं मघोन:

तेनार्त्थित्वं त्वयि विधिवशात् दूरबन्धुर्गतोहं

याच्ञा  मोघा वरमधिगुणे नाधमे लब्धकामा                       6

 

सन्तप्तानां त्वमसि शरणं  तत् पयोद प्रियाया:

सन्देशं मे हर धनपतिक्रोधविश्लेषितस्य

गन्तव्या ते वसतिरलका नाम यक्षेश्वराणां

बाह्योद्यानस्थित हरशिर: चन्द्रिकाधौतहर्म्म्या                      7

 

त्वामारूढं पवनपदवीं उद्गृहीतालकान्ता:

प्रेक्षिष्यन्ते पथिकवनिता: प्रत्ययादाश्वसन्त्य:

कस्मन्नंदधे  विरहविधुरां त्वय्युपेक्षेत जायां

नस्याद् अन्योपि अहमिव जनो य: पराधीनवृत्ति:                  8

 

मन्दं मन्दं नुदति पवनश्चानुकूलो यथा त्वां

वामश्चायं नदति मधुरं चातकस्ते सगन्ध:

गर्भाधानक्षमपरिचयान्नूनमाबद्धमालां

सेविष्यन्ते नयनसुभगं खे भवन्तं वलाका:                        9

 

तां चावश्यं दिवसगणनातत्परां एकपत्नीं

अव्यापन्नां अविहतगति: द्रक्ष्यसि भ्रातृजायां

आशाबन्ध: कुसुमसदृशं प्रायशोह्यङ्कनानां

सद्य:पाति प्रणयि हृदयं विप्रयोगे रुणद्धि                              10

 

कर्त्तुं यच्च प्रभवति महीं उच्छिलीन्ध्रामवन्ध्यां

तत् श्रुत्वा ते श्रवणसुभगं गर्ज्जितं मानसोत्का:

आकैलासात्  बिसकिसलयच्छेद पाथेयवन्त:

सम्पत्स्यन्ते नभसि भवतो राजहम्सा: सहाया:                      11

யக்ஷர்கள் என்பவர்கள் வானுலகில் கைலாசத்தில் உள்ள அளகாபுரியில் வசிப்பவர்கள். செல்வங்களின் மன்னனான வைஸ்ரவணன் என்பவர்தான் அவர்களது அரசராவார். அவரது அடிமையான ஒரு யக்ஷன் ஒருமுறை தனது கடமையிலிருந்து தவறிவிட்டதால் அரசன் அவனைத் தனது மனதுக்கினியாளிடமிருந்து ஒரு வருட காலம் பிரிந்து வாழுமாறு சபித்துவிட்டான்.

மனைவியைப் பிரிந்து விரஹ தாபத்தால் வாடிய அந்த யக்ஷன் பாரத நாட்டின் தெற்குப் பகுதியில், மாமன்னன் ஜனகனின் புதல்வியின் நீராட்டினால் புனிதமடைந்த நீர்த்தேக்கங்களும் அநேகவித நிழல் மரங்களும் நிறைந்த ராமகிரி என்னும் ஆசிரமங்கள் நிறைந்த பகுதியில் வாழ்ந்து வந்தான். மனையாளைப் பிரிந்த துக்கத்தால் அவனுடைய கையில் இருந்த தங்கக் காப்பு கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்துவிட்டதால் அவனுடைய கை வெறுமையாகக் காட்சியளித்தது. இந்நிலையில் ஆஷாட மாதத்தில் ஒருநாள் அவன் ஆகாயத்தில், தனது தந்தங்களைக் குத்திக் கொண்டு நிற்கின்ற யானையின் வடிவமுள்ள ஒரு மேகத்தைக் கண்டான்.  அதன் முன்னால் சென்று நின்றுகொண்டு நீர்மல்கும் கண்களுடன் அதை உற்றுப் பார்த்தவாறு வெகுநேரம் அவன் தனது முன் நினைவுகளில் ஆழ்ந்தான். மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களே புது கார்மேகத்தைக் காணும்போது தமது காதலியரை நினைவுகூர்வார்கள்; அவ்வாறிருக்க, பிரிவால் வாடும் யக்ஷனின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? மேகத்தின் வாயிலாகத் தனது நிலைமையைத் தன மனைவிக்கு அறிவிக்கலாம் என்று கருதித் தூதின் ஆரம்பமாக நல்வரவை அறிவித்தான்.  ஆனால், ஐம்புலன்களுள்ள உயிரினங்களால் எடுத்துச் செல்லக்கூடிய தூதினை புகை, வெப்பம், நீர், காற்று ஆகியவைகளாலான உயிரற்ற மேகத்தினால் எடுத்துச் செல்ல முடியுமா என்னும் ஐயம் இங்கு எழலாம். ஆனால் காதல் வயப்பட்டு மதியிழந்தவர்களுக்கு உயிருள்ளவைகளுடனும் உயிரற்றவைகளுடனும் ஒருபோலத் தமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இயலும் என்பதே இங்கு நூலாசிரியரின் விளக்கம். “தாங்கள், புகழ்பெற்ற புஷ்கலாவர்த்தகர்களின் வம்சத்தில் பிறந்தவரும் தேவேந்திரனுடைய மனங்கவரும் அம்சமாகியவரும்தான் என்பதை நானறிவேன். ஆகையால்தான் வினைப் பயனால் உற்றாரை விட்டகன்று வாழும் நான் ஒரு விண்ணப்பத்துடன் தங்களை நாடி வந்துள்ளேன். “நல்லாரிடம் இரந்து வாங்கும் பொருள் பாழானதாலும் அது ஏற்கத் தகுதியானது, ஆனால் தீயோரிடம் கேட்கும் பொருள் கிடைத்தாலும் அது ஏற்கத் தகுதியானதல்ல” என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? தாங்கள் என்போன்ற அகதிகளுக்குத் துணையாக இருப்பவரல்லாவா? இருப்பவரல்லவா? எனவே வைஸ்ரவணனுடைய  கோபத்தால் என்னைப் பிரிந்து துயருற்றிருக்கும் எனது மனைவியிடம் தாங்கள்தான் தூது செல்லவேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன். மகேஸ்வரனின் திருமுடியை அலங்கரிக்கும் நிலவின் பாலொளியில் மூழ்கி நிற்கும் மாட மாளிகைகளுடனும் கூட கோபுரங்களுடனும் கூடிய அளகாபுரி என்னும் பெயருள்ள யக்ஷ சீமான்களின் நாட்டிற்குத்தான் தாங்கள் செல்லவேண்டும். வாயு வழியாகச் செல்லும் தங்களை, தலைவனின் பிரிவால் துயருற்றிருக்கும் பெண்கள் தங்கள் தலைவன் விரைவில் வருவார் என்னும் நம்பிக்கையில் தமது முகத்தை மறைக்கும் குறுங்குழல் கற்றைகளைக் கையால் அளைந்து மாற்றிவிட்டுப்  பார்ப்பார்கள். தாங்கள் இக்காரியத்தில் இறங்கிவிட்டால் பின் யாரேனும் விரக துக்கத்தால் தவிக்கும் தனது மனைவியைக் கைவிடுவார்களா? வாயுவும் தங்களுக்கு அனுகூலமாக மெல்ல மெல்ல வீசித் தங்களை அனுகூலிப்பதைப் போலவே உங்களது உறவினரான சாதகப் பட்சியும் உங்கள் இடதுபாகத்தில் இருந்துகொண்டு இனிமையாகக் கூவும். வானத்தில் கண்ணிற்கு இனிய வெள்ளில் என்னும் பறவையினங்களின் பேடுகள் வரிசை வரிசையாக வந்து சூல்கொள்ளுவதற்கு ஏற்ற இனிய சூழ்நிலைகளை உண்டாக்கும் என்பது உறுதி. பூமியின் மேல் காளான்களை முளைக்கச் செய்து

பூமிதேவியை பலனளிக்க வல்லவள் ஆக்க வல்லதும் காதுகளுக்கு இன்பம் நல்குவதுமான தங்களது அந்த இடியோசை இருக்கிறதே, அதைக் கேட்கும் அன்னப் பறவைகள் மெல்லிய இளம் தாமரைத் தண்டுகளின் துண்டுகளைக் கட்டுச் சோறு போலக் கௌவிக் கொண்டு வானவீதியில் தங்களுக்குத் துணையாகக் கைலாசம்வரை வரும்.